90 காலகட்டங்களில் அனைவருக்கும் பிடித்த நடிகையென்றால் அதில் தேவயானியும் ஒருவர். இந்நிலையில் நடிகையிலிருந்து தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.
20 நிமிடங்கள் கொண்ட கைக்குட்டை ராணி எனும் குறும்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
ஒரு சிறுமி தாயை இழந்த பின் சமூகத்தில் அவள் எதிர்கொள்ளும் விடயங்களை இப் படம் எடுத்துரைக்கிறது. இளையராஜா இப் படத்துக்கு இசைமையத்துள்ளார்.
இந்நிலையில் இப் படம் 17 ஆவது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான திரைப்படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
திரைத்துறையினர் அனைவரும் நடிகையும் இயக்குநருமான தேவயானிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.