டொட்டென்ஹாமுடனான முன்களவீரரான சண்ணின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில் அவரது ஒப்பந்தத்திலுள்ள ஓராண்டு நீடிப்பை செவ்வாய்க்கிழமை (07) அக்கழகம் செயற்படுத்தியிருந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு டொட்டென்ஹாமில் இணைந்த 32 வயதான சண், 431 போட்டிகளில் விளையாடி 169 கோல்களைப் பெற்றதோடு, 50 கோல்களைப் பெறுவதற்கு உதவியுள்ளார்.