இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டைக் கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் கருத்திற் கொள்வதாகவும், ஆனால் 25 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு மேல் செலுத்தத் தயாரில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
யுனைட்டெட்டுடன் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரையில் 27 வயதான றஷ்ஃபோர்ட் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.