16.4 C
Scarborough

என் மகன் இறந்துட்டான் – துயர செய்தி பகிர்ந்த திரிஷா!

Must read

சமூக வலைதளங்களில் துயர் செய்தி பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா.

தற்போது நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதுதவிர இவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளங்களில் துயர் செய்தி பகிர்ந்துள்ளார்.

அதில், “என் மகன் சோரோ இன்று கிறிஸ்துமஸ் காலை உயிரிழந்து விட்டான். என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கை ஒருதுளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது நன்கு தெரியும். “நானும் என் குடும்பத்தாரும் உடைந்துவிட்டோம்.நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். இதனால் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, ரேடாரில் இருந்து விலகி இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article