உலகின் சிறந்த மற்றும் மோசமான விமானங்களின் பட்டியல் வெளியீடு
உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளதுடன், மிகவும் மோசமான விமானங்களில் ஸ்கை எக்ஸ்பிரஸ் உள்ளது.
உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி AirHelp நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, 2024 ஆம் ஆண்டின் எயார் ஹெல்ப் வௌியிட்டுள்ள அறிக்கை, வாடிக்கையாளரின் மதிப்பீடு, சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் 54 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளின் கருத்தை பெற்று 2024 ஆம் ஆண்டின் எயார் ஹெல்ப் அறிக்கை வௌியிட்டுள்ளது.