13.8 C
Scarborough

வாட்ஸப், பேஸ்புக் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பிய நபருக்கு  சிறைத்தண்டனை 

Must read

நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்தரவை பிறப்பித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, தண்டனையை ஐந்தாண்டு காலத்திற்கு இடைநிறுத்தியதுடன், சந்தேக நபருக்கு 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் உடனடியாக நீக்குமாறு சந்தேக நபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகருக்கு நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article