இந்தியன் பிறீமியர் லீக் இனை (ஐ.பி.எல்) 2028ஆம் ஆண்டு 94 போட்டிகளைக் கொண்டதாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் அருண் சிங் டுமால் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் 10 அணிகளும் தமது மைதானத்திலும், எதிரணியிலும் விளையாடும்.
கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும், குஜராத் டைட்டான்ஸும் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் ஐ.பி.எல்லானது 74 போட்டிகளாக மாற்றமடைந்திருந்தது.