18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன் படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 180 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.