13.8 C
Scarborough

8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்தது எப்படி? – அஜித் பகிர்வு!

Must read

நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். கார் பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்” என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் கூறியிருப்பதாவது: “கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். கூட்டு உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன்.

நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். பந்தயத்துக்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன். கார் பந்தயத்துக்காகவே எனது உடற்தகுதியை நான் பராமரித்து வருகிறேன்” இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த பட அறிவிப்பு குறித்து எதையும் வெளியிடாமல் இருந்து வருகிறார் அஜித். தற்போது முழுக்க முழுக்க கார் பந்தயத்தில் அவர் கவனம் செலுத்தி வருவதால் இந்த ஆண்டு இறுதியில்தான் தனது அடுத்த படத்தில் அஜித் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article