ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டுபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 5- ஆவது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.