தென் இந்திய சினிமாவின் மிக முக்கியமான, திறன் வாய்ந்த நடிகரான சூர்யா இன்று 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நேற்று இரவு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி தனது 50வது பிறந்தநாளை சூர்யா கொண்டாடியுள்ளார்.
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் இவர் அறிமுகம் ஆகியிருந்தார் அதனை தொடர்ந்து நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
இவர் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.
இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.