டஃபெரின் பகுதியில் அமைந்துள்ள மாலில் உள்ள ஒரு நகைக் கடையில் முகமூடி அணிந்த ஐந்து சந்தேக நபர்கள் சென்றுள்ளதோடு அவர்களில் சுத்தியல்களுடன் சென்ற இரண்டு பேர், காட்சிப் பெட்டிகளை உடைத்து, ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டஃபெரின் வீதி மற்றும் ப்ளூர் வீதி மேற்கு அருகே அமைந்துள்ள குறித்த மாலில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மாலை 7:22 மணியளவில் முறைப்பாடு வந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் உடல் ரீதியாக காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்பவில்லை
சந்தேக நபர்கள் கருமை நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

