வேல்ஸின் கார்டிஃப் நகரில் உள்ள ஒரு தெருவில் நிரோதா என்ற 32 வயது இலங்கைப் பெண் படுகாயமடைந்து கிடப்பதாக தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை அங்கு விரைந்துள்ளது. இதனை அடுத்து குறித்த பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் திசர வெரகலேஜ் என்ற 37 வயது இலங்கையர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அத்துடன் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்திருக்கக்கூடிய சாம்பல் நிற ஃபோர்ட் ஃபீஸ்டா பற்றிய தகவல்களை பொலிஸார் தேடி வருகின்றனர். காரைப் பார்த்திருக்கக்கூடிய எவரும் தகவல் வழங்கலாம் என கேட்டு கொண்டுள்ளனர்.
இதேநேரம் நிரோதாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காவல்துறை இரங்கல் தெரிவித்துதுள்ளது.