யாழ்ப்பாணம் – பலாலி நாகதம்பிரான் வழிபாட்டுதளம் 35 வருடங்களின் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழிபாட்டுதளம் நேற்று (28) மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுதளம் அமைந்துள்ள பகுதி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த மாதம் 23 ஆம் திகதி வழிபாட்டுதளத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்தநிலையில், 27 ஆம் திகதி முட்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு பூஜை வழிபாடுகள் செய்வதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பக்தர்கள் வந்து செல்வதற்குமான சூழல் உருவாக்கப்பட்டது.
இதேவேளை நேற்றைய தினம் (28) ஊர் மக்கள் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு இராணுவத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.