14.6 C
Scarborough

27 வருடங்களின் கிண்ணக் கனவினை நனவாக்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி!

Must read

இன்று (14) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா சுமார் 27 வருட இடைவெளியின் பின்னர் ஐ.சி.சி. இன் கிண்ணம் ஒன்றை தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற தென்னாபிரிக்க – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இறுதிப் போட்டியில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவுஸ்திரேலியா முறையே 212 மற்றும் 207 ஆகிய ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ஓட்டங்கள் மாத்திரம் பெற்ற தென்னாபிரிக்க வீரர்களுக்கு போட்டியின் வெற்றி இலக்காக சவால் நிறைந்த 282 ஓட்டங்கள் போட்டியின் மூன்றாம் நாளில் நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடரின் நடப்புச் சம்பியன்களின் பலமிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி தொடக்கத்தில் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் அணித் தலைவர் டெம்பா பவுமா, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரம் பொறுப்புடன் ஆடி மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 147 ஓட்டங்கள் சேர்த்தனர். டெம்பா பெவுமா போட்டியின் இன்றைய நான்காம் நாளில் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் மார்க்ரம் நிதான ஆட்டத்துடன் ஆடி சதம் விளாச, தென்னாபிரிக்கா போட்டியின் வெற்றி இலக்கினை 83.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து அடைந்து கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் வெற்றியினை உறுதி செய்த மார்க்ரம் தன்னுடைய எட்டாவது டெஸ்ட் சதத்துடன் 14 பெளண்டரிகள் அடங்கலாக 136 ஓட்டங்கள் பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களுடன் போராடிய போதும் அது வீணாகியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article