கனடாவில் மாட்டிறைச்சியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகி உள்ளது.
ஆகஸ்ட் நீண்ட வார இறுதிக்கு கனடியர்கள் தயாராகி வரும் நிலையில் மாட்டிறைச்சி விலைகள் கடந்த ஆண்டை விடவும் 25 சதவீதம் உயர்ந்துள்ளன,
இது பணவீக்க விகிதத்தை விட பாரியளவு அதிகமாக உள்ளது மற்றும் கோடைகால பர்கர்கள் மற்றும் ஸ்டீக்ஸின் விலையும் அதிகரித்துள்ளது என கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
கனடாவின் சமீபத்திய தரவுகளின்படி, 2025 மே மாதத்தில் அரைத்த மாட்டிறைச்சியின் விலை ஒரு கிலோவிற்கு $14.67 ஐ எட்டியது, இது கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட $11.72 வீதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும், மேலும் நாட்டின் தற்போதைய பணவீக்க விகிதமான 1.7 சதவீதத்தை விட இது மிக அதிகமாகும்.
வர்த்தக பதட்டங்களின் நீடித்த விளைவுகளும், இளைய சமுதாயம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் சூழலும், சில உள்நாட்டு மாட்டிறைச்சிக்கான தேவையை வலுப்படுத்தியுள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்த்துள்ளனர்.