சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பங்களாதேஷ் 217 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் தோற்ற நிலையில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (28) ஆரம்பமான இப்போட்டியின் முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை சிம்பாப்வே பெற்றது.
இந்நிலையில் பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஷட்மன் இஸ்லாமின் 120, மெஹிடி ஹஸன் மிராஸின் 104, தன்ஸிம் ஹஸன் சகிப்பின் 41, முஷ்பிக்கூர் ரஹூமின் 40, அனாமுக் ஹக்கின் 39, மொமினுல் ஹக்கின் 33 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்களைப் பெற்று சிம்பாப்வேயின் முதலாவது இனிங்ஸை விட 217 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. பந்துவீச்சில், அறிமுகவீரர் வின்சென்ட் மசெகெசா 5, வெஸ்லி மட்ஹெவெரே, பிரயன் பென்னிட், பிளஸிங்க் முஸர்பனி, வெலிங்டன் மஸகட்ஸா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.