ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணி சராசரியாக 4.65 ஓட்ட வேகத்தில் ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி தமது இன்னிங்ஸின் கடைசி ஐந்து ஓவர்களில், 3 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹமட் வசீம் 3 விக்கெட்டுக்களையும், ஹரீஷ் ரவூப் மற்றும் ஃபாசில் அக்ரம் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இலங்கையின் துடுப்பாட்டத்திற்கு கடும் சவாலை அளித்தனர்.
இதன் மூலம், இந்த ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் அணிக்கு 212 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

