கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும்.
விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக எவரேனும் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.