19.6 C
Scarborough

2034 வரை மென்செஸ்டர் சிட்டியில் ஒப்பந்தமான ஹாலண்ட்

Must read

பிரபல உதைபந்து வீரரான நோர்வே நாட்டைச் சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்காக 2034ஆம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 இலட்சம் டொலர் கிடைக்குமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எர்லிங் ஹாலண்ட் கழகப் போட்டிகள், மென்செஸ்டர் சிட்டி அணி வரலாற்றிலும் அதிகமாக சம்பளம் வாங்கும் நபராக சாதனை படைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மென்செஸ்டர் சிட்டியில் இணைந்த எர்லிங் ஹாலண்ட் இன்னும் 9 ஆண்டுகள் வரை அதாவது, எதிர்வரும் 2034ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முடியும்போது எர்லிங் ஹாலண்டுக்கு 34 வயதாகியிருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு எர்லிங் ஹாலண்ட் நோர்வேயின் தேசிய அணியில் அறிமுகமானார். இதுவரையில் 36 போட்டிகளில் 33 கோல்கள் அடித்துள்ளார். 24 வயதாகும் எர்லிங் ஹாலண்ட் 41 யு.இ.எவ்.ஏ. சம்பியன்ஸ் லீக் சம்பியன்ஷிப்பில் 42 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article