16.4 C
Scarborough

2025ஆம் ஆண்டு முதல் கனடாவின் புலம்பெயர் விதிகளில் மாற்றம்!

Must read

2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், பல்வேறு நாடுகள் தங்கள் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.

கனடாவிலும் சட்டங்களில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

அவ்வகையில், புலம்பெயர்தல் தொடர்பிலும் சில மாற்றங்கள் அறிமுகமாகின்றன.

கனடாவின் பெடரல் அரசு, 2025ஆம் ஆண்டு முதல் நிரந்தர குடியிருப்பு அனுமதி இலக்குகளை குறைக்க முடிவு செய்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 105,000 சேர்க்கைகள் குறைக்கப்படும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான இலக்குகளும் அடங்கும்.

அத்துடன், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளும் 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025ஆம் ஆண்டில் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.

வீட்டு வசதியை மேம்படுத்துவதற்காகவும், வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article