தமிழ் சினிமாவில் தற்போது முன்பு ரிலீஸ் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரிப்பாளர்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது தமிழ்வண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா – நயன்தாரா நடிப்பில் 2006-ம் ஆண்டில் வெளியான ‘கள்வனின் காதலி’ திரைப்படம், 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர உள்ளது.
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் வந்த இந்த படத்தின் பாடல்கள்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.