இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக மாறியுள்ள நிலையில், ஐபிஎல் 2008 இன் முதல் தொடரில் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையேயான போட்டியில், மும்பை அணியின் ஹர்பஜன் சிங் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்தை அறைந்தார், அந்த சம்பவம் பின்னர் ‘ஸ்லேப்கேட்’ என்று அறியப்பட்டது.
இப்போது, ஐபிஎல் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் லலித் மோடி, ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த சம்பவத்தின் வெளிப்படையான, காட்சிகளை வெளியிட்டுள்ளார்.