10.1 C
Scarborough

10 இந்திய மீனவர்கள் கைது

Must read

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய படகுகளை அகற்றும் நோக்கில் வட மத்திய கடற்படை கட்டளையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இலங்கையின் கடல் எல்லைச் சட்டங்களை மீறி தொடர்ந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு படகைக் கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட இந்திய படகு மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article