ஹமில்டன் நகர மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதோடு ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளளார் .
மேக்நாப் மற்றும் ஜேம்ஸ் தெருக்களுக்கு இடையே கிங் ஸ்ட்ரீட் மேற்கில் உள்ள ஜாக்சன் சதுக்கத்திற்கு அருகில், மாலை 5:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கடமை ஆய்வாளர் கிரெக் டோர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றொரு ஆணுக்கு உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
அந்த பகுதியை விட்டு தப்பி ஓடிய சந்தேக நபர், ஜேம்ஸ் தெருவில் கடைசியாக வடக்கு நோக்கி சென்றதாகவும் அவர் தேடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் ஒரு பேருந்தின் முன் நடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இருவரும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்களா என்பது பொலிஸாருக்கு இன்னும் தெரியவில்லை என்று டோர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.