பணியில் இல்லாத சந்தர்ப்பத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஹமில்டன் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர், ஆனால் சம்பவம் குறித்த வேறு எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
கடந்த மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிராண்ட்ஃபோர்ட் காவல் பிரிவு விசாரணையை நடத்தியது, இதன் விளைவாக, கான்ஸ்டபிள் பீட்டர் ஃபிரான்சின் மீது தாக்குதல் ஒன்று தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் செப்டம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
சம்பந்தப்பட்ட மற்ற நபர் மீதும் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.