ஸ்கார்பாரோவில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உணவகங்கள் சேதமடைந்துள்ளதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு மற்றும் சின்னாட் வீதி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கியால் சூடு நடந்த இடத்தில் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதோடு விசாரணை இடம்பெற்று வருகிறது.
சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.