ஆசிய கிண்ண 2025 சூப்பர் ஃபோர் (4) போட்டி நேற்று இலங்கை மற்றும் பங்காளதேஷ் இடையே இடம்பெற்றது.
இந்த போட்டியில் பங்காளதேஷ் 4 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இதனை சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்காக முஸ்தாபிசுர் ரஹ்மான் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பங்காளதேஷ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான முன்னாள் கேப்டன் ஷகிப் அல்-ஹசனின் (149 விக்கெட்) சாதனையை அவர் சமன் செய்தார்.
இதற்கமைய ஷகிப் அல் ஹசன்/ முஸ்தாபிசுர் ரஹ்மான் 149 விக்கெட்டுகள் பெற்று பட்டியலில் முதலிடத்திலும் 99 விக்கெட்டுகள் பெற்று தஸ்கின் அகமது இரண்டாம் இதத்திலும் 61 விக்கட்டுக்கள் பெற்று மெஹதி ஹசன் 3 ம் இடத்திலும் உள்ளனர்.

