இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சல்மான் கானின் ‘கல்வான் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான் கானின் முந்தைய வெளியீடான ‘சிக்கந்தர்’ படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால். அனைவரது கவனமும் இப்படத்தின் மீது உள்ளது.