13.5 C
Scarborough

“வேலை செய்வதை போதை போல உணர்கிறேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் அனுபவ பகிர்வு

Must read

நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், “எனக்கு நண்பர்கள் இருந்தனர். ஆனால் நான் எப்போதும் பின்தங்கியே இருந்தேன். எனக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தால் கூட நான் இன்னும் ஆழமாக என்னுடைய வேலையில்தான் மூழ்கி இருப்பேன். ஒரு பாடலை உருவாக்க 8 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தாலும், நான் அதை நிறுத்த மாட்டேன். நான் அதை தாண்டி தொடர்ந்து முயற்சி செய்வேன். அதிக நேரம், சிறந்த வேலை, சிறந்த திருப்தி. இதுவே என் தாரக மந்திரம். அதிக நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்காக நான் குறைவாக வேலை செய்ய வேண்டும் என்பதல்ல.

நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு புதிய இசை உலகுக்குள் நுழைய நான் அனைத்தும் முயற்சிகளையும் எடுக்க விரும்புகிறேன். அப்படியே 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

நான் என் நண்பர்களை நேசிக்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தேன் என கேள்விப்பட்டு பல பாடகர்கள், இயக்குநர்கள் என அனைவருமே எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறினேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article