3 C
Scarborough

வெளிநாட்டினருக்கு லாட்டரி கிரீன் கார்டு முறை ரத்து: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

Must read

லாட்​டரி கிரீன் கார்ட் முறையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

அமெரிக்க நாட்​டில் தற்​போது லாட்​டரி கிரீன் கார்ட் முறை பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. வெளி​நாட்​டில் இருந்து அமெரிக்கா​வுக்கு வந்​துள்​ளவர்​கள் கிரீன் கார்ட் கோரி விண்​ணப்​பம் செய்​வர். அதாவது ஒவ்​வொரு ஆண்​டும் 50,000 கிரீன் கார்ட் அமெரிக்க அரசு சார்​பில் வழங்​கப்​படும்.

ஆனால், இந்த எண்​ணிக்​கையை தாண்டி அதிக அளவி​லான நபர்​கள் கிரீன் கார்ட் கோரி விண்​ணப்​பிக்​கும்​போது கம்ப்​யூட்​டர் அடிப்​படையி​லான லாட்​டரி மூலம் கிரீன் கார்ட் வழங்​கப்​படும். அதாவது கம்ப்​யூட்​டரே, லாட்​டரி குலுக்​கல் அடிப்​படை​யில் இந்த 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து அறிவிக்​கும்.

இந்த கிரீன் கார்ட் பெறு​பவர்​கள் அமெரிக்​கா​வின் குடி​யுரிமை​யைப் பெற்​ற​தாக அறிவிக்​கப்​படு​வர். இந்த லாட்​டரி கிரீன் கார்ட் முறையை அதிபர் ட்ரம்ப் கடுமை​யாக எதிர்த்து வந்​தார். இந்​நிலை​யில் லாட்​டரி கிரீன் கார்ட் முறை ரத்து செய்​யப்​படு​வ​தாக நேற்று முன்​தினம் அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article