வாகன் பகுதியில் உள்ள வீட்டின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை “பல” துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதை அடுத்து, விசாரணை நடத்தி வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடொன்று பல முறை தாக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, காலை 6:25 மணியளவில் ஃபாரெல் வீதி பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு “உடனடி அச்சுறுத்தல் இல்லை” என்று தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் விசாரணை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளனர்.