22.5 C
Scarborough

விவாகரத்து வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு!

Must read

கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் என்ற பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 12 ஆண்டு கால திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பர விவாகரத்து கோரிய மனுவை வரும் செப்டம்பர் 25-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article