22.9 C
Scarborough

​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி: அரை இறு​தி​யில் அரினா சபலெங்கா

Must read

விம்​பிள்​டன்: விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 5-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், 17-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் டெய்​லர் ஃபிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்​கா, 104-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெர்​மனி​யின் லாரா சீக்​மண்​டுடன் மோதி​னார். இதில் அரினா சபலெங்கா 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார்.

முன்​ன​தாக நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 19-ம் நிலை வீர​ரான பல்​கேரி​யா​வின் கிரி​கோர் டிமிட்​ரோவுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் முதல் 2 செட்​களை 3-6, 5-7 என இழந்​தார். 3-வது செட் 2-2 என சமநிலை​யில் இருந்த நிலை​யில் காயம் காரண​மாக டிமிட்​ரோவ் வில​கி​னார். இதனால் ஜன்​னிக் சின்​னர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

இந்த ஆட்​டத்​தின் போது முதல் செட்​டில் பேஸ் லைன் அருகே கட்​டுப்​பாட்டை இழந்து ஜன்​னிக் சின்​னர் கீழே விழுந்​தார். இதில் அவரது முழங்​கை​யில் காயம் ஏற்​பட்​டது. எனினும் அவர், அதை சமாளித்து விளை​யாடி​னார். ஆனால் 3-வது செட்​டின் போது டிமிட்​ரோவ் நெஞ்சை பிடித்​த​படி களத்​தில் அமர்ந்​தார். இதைத் தொடர்ந்து மருத்​து​வர்​கள் அவருக்கு சிகிச்சை அளித்​தனர். சிறிது ஓய்​வுக்கு பின்​னர் களத்​துக்கு வந்த டிமிட்​ரோவ் தன்​னால் போட்​டியை தொடர முடி​யாது, வில​கிக் கொள்​கிறேன் என அறி​வித்​து​விட்டு சென்​றார்.

10-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்​கில் 47-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரென்ஸோ சோனேகோவை​யும், 6-ம் நிலை வீர​ரான செர்​பி​யா​வின் நோவாக் ஜோகோ​விச் 1-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் 11-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினாரை​யும் வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article