19.4 C
Scarborough

விதித் குஜ​ராத்​தியை தோற்கடித்த ரே ரோப்​சன்

Must read

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3-வது போட்டி, சென்னையில் ள நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான கார்த்திகேயன் முரளி, அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது சமநிலை ஆனது.

உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டரான ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது சமநிலையில் முடிவடைந்தது.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்​டரான விதித் குஜ​ராத்​தி, அமெரிக்காவின் ரே ரோப்​சனை எதிர்​கொண்​டார். இ​தில் 54-வது நகர்த்​தலின் போது விதித் குஜ​ராத்​தியை ரே ராப்​சன் தோற்​கடித்​தார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், உலக தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இந்த ஆட்டம் 60-வது நகர்த்​தலின் போது சமநிலை ஆனது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article