தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்தியாவின் கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலியானவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் அமைத்த விசேட புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுவரையில் விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி பிரேப் ஆனந்த் வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஜிஜி அஸ்ரா கார்க்கிடம் ஒப்படைத்தார் .இதை தொடர்ந்து தற்போது ஜிஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசேட புலனாய்வு குழு விசாரணையை நடத்தி வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அப்பகுதி மக்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது இந்த விசாரணை குழுவில் மேலும் 8 அதிகாரிகள் இன்று சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

