வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வாகன சந்தை திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வங்கி ஆளுநர் , தனக்குத் தெரிந்தவரையில் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,அரசாங்கம் அத்தகைய எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
இதனை உறுதிப்படுத்தும் அறிக்கையை துறை சார் அமைச்சர் வெளியிடுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.