மிசிசாகாவில் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் 60 வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக பீல் பொலிசார் தெரிவித்தனர்.
இரவு 11:50 மணியளவில் மிசிசாக வீதி மற்றும் மீடோவேல் பவுல்வர்டு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலை 407 இலிருந்து மிசிசாக வீதியில் தெற்கு நோக்கிச் சென்ற வெள்ளை நிற நிசான் SUV, தடுப்புச் சுவரைக் கடக்கும் ஒரு பாதசாரி மீது மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.
சாரதி சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு உதவி செய்ய முயன்றார். இருப்பினும், பாதசாரி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பீல் பொலிசார், வீதி விபத்துகள் பணியகம் ஆகியன விசாரணையை மேற்கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

