அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு நாட்டை விட்டு வெளியேறும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
அமெரிக்க வரிச் சலுகைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் குறித்த குழுவில் இடம்பெறுவார்கள்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை விதித்துள்ளது. எனினும் நாடு அண்மையில் வங்குரோத்து அடைந்து மீண்டு வரும் நிலையில் வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.