17.3 C
Scarborough

வரவேற்பை பெற்றுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர்!

Must read

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்துக்குப் பிறகு நிவின் பாலி, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’. இதனை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்பபடத்தில் அஜு வர்கீஸ், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இப்படம் எண்டர்டெய்னர்மென்டாக உருவாகியுள்ளதை டீசரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article