இலங்கை சுங்கம் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 235 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெனரல் சுனில் நோனிஸ் தெரிவித்தார்.
புதிய சுங்கப் பதிவு மற்றும் அறிவிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், சுங்கத்துக்கு ஜூலை மாதத்தில் கிடைத்த வருமானம் ஒரு வரலாற்று மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.
“2023 ஆம் ஆண்டில், ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபா கிடைக்கபெற்றமை பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. இன்று, நாம் 235 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான வசதியை மேம்படுத்துவதற்காகவும், இந்த துறையின் செயல்திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் புதிய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் ஜெனரல் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதியே வருவாயின் பெரும்பகுதியைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.