15.1 C
Scarborough

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் ஆலோசனை

Must read

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் குறித்து உலக வங்கியும் இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.

கலந்துரையாடலின் போது, புதிய அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான உலக வங்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கலந்துரையாடலின் மற்றுமொரு முக்கிய அம்சமாக இருந்தது.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி மற்றும் வீடமைப்பு சவால்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாயம், கடற்றொழில், சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதாரம் என்பன அரசாங்கத்தின் முதன்மையான அபிவிருத்தி முன்னுரிமைகளாகும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article