லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.
‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, அரங்கேற்றினார்.
35 நாட்களில் எழுதிய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். Eventim Apollo அரங்கத்தில் சிம்பொனி இசையை, மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அரங்கமே அதிர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.