14.9 C
Scarborough

றியல் மட்ரிட்டை வீழ்த்திய ஆர்சனல்

Must read

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் மைதானத்தில் புதன்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.

ஆர்சனல் சார்பாக டெக்லான் றைஸ் இரண்டு கோல்களையும், மிகெல் மெரினோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர்ண் மியூனிச் தோற்றது. மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை தோமஸ் மல்லர் பெற்றதோடு, இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், டேவிடே பிரெட்டசி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article