இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்குப் பிறகு இந்த சர்வதேச போட்டிக்கு களம் இறங்கியுள்ளனர்.
ரோகித் சர்மாவிடம் இருந்து அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
அவர் தலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக களம்இறங்குகிறது.
இந்த போட்டியில் கேப்டனாக இருந்தாலும் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என கில் தெரிவித்துள்ளார்.
ஆடுகளத் தன்மை உட்பட போட்டிகள் குறித்து எது கேட்டாலும் ரோகித் சர்மா உதவிகரமாக இருப்பதாகவும் கோலியுடன் நல்ல உறவு உள்ளது என்றும் இருவருமே எனக்கு ஆலோசனை அளிக்க தயங்கியது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அந்த இரு ஜாம்பவான்களை வழி நடத்துவது எனக்கு பெரிய கௌரவம் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

