இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவின் உடல் பருமன் குறித்து வெளியான பதிவால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மாவின் உடல் பருமன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டொக்டர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவால் சமூகவலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தநிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோஹித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.