தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சோக்லெட் போயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம். பம்மல் கே சம்மந்தம். ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய பட வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் 10 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ‘ரீ என்ட்ரி’ கொடுக்கவுள்ளார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவரும் படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரித்து வரும் இப்படம் முழுமையான பொழுது போக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.