திரைப்பட உலகில் நுழைந்து, தற்போது “சூப்பர் ஸ்டார்” பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினி காந்த்.
இவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். அவரது படத்தையும் சில காரணங்களால நிராகரித்த நடிகை ஒருவரும் இருக்கிறார்.
1975-ம் ஆண்டு, கே. பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த ரஜினிகாந்த், இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக்காக பல நடிகைகள் காத்திருக்கும்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் படையப்பா, பாபா . சிவாஜி, சந்திரமுகி ஆகிய பட வாய்ப்புக்காக நாடிய போது அந்த படங்களை நிராகரித்துள்ளார்.
இருப்பினும், இயக்குனர் ஷங்கரின் “எந்திரன்” படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார்.

