கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியான மகான் திரைப்படத்தின் 3 வருட நிறைவையொட்டி படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.
இப்படத்தில் அப்பாவும் மகனும் கொள்கை ரீதியாக இருவேறு கோட்பாட்டில் இருப்பார்கள். மகன் பொலிஸ் அதிகாரியாகவும் அப்பா சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவராகவும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் மையக்கதையாகும்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் டிலிட்டட் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சீயான் விக்ரம் அவருக்கு பிடிக்காத நபர்களையும், தன் முன்னால் காதலியின் கணவனையும் அழைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது.