உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மெஸ்சி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானம் வரும் மெஸ்சி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மெஸ்சி வருகை தொடர்பான அனைத்து விசயங்களும் இறுதி செய்யப்பட்டபின், முழு அட்டவணையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.